புதிய வகை

படித்ததில் பயனுள்ளது.....

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இனி அறுவை சிகிச்சையின் போது அந்த புற்றுக்கட்டிகளையும், திசுக்களையும் துல்லியமாக அகற்ற ஒரு புதிய வகை கத்தியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, புற்று நோய் தாக்கிய திசுக்களை மட்டும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது இயலாத காரியமாகவே இருந்து வந்தது. இதனால், அறுவை சிகிச்சை செய்த போதிலும், அந்த நோயாளிக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயமும் இருந்தது. அறுவை சிகிச்சை மேற்கொள்ள மின்சாரத்தால் இயங்கக்கூடிய ஒரு கத்திபோன்ற கருவி பயன்படுத்தப்படும். மேலும் இந்த கருவியை கொண்டு மருத்துவர்கள் புற்று நோய் பாதித்த திசுக்களை அகற்றும் போது, அவை பொசுங்கிவிடும். அப்போது ஒரு விதமான புகை வெளியாகும்
மேலும், திசுக்களின் மாதிரிகளை சோதனைச் கூடத்தில் பரிசோதிப்பதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது தேவைப்பட்டது. புற்றுநோய் பாதித்த திசுக்களை மிக துல்லியமாக அகற்ற ஒரு புதிய வகை கருவியை லண்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம், அந்த கருவியால், புற்று நோய் பாதித்த திசுக்களை சாதாரண திசுக்களில் இருந்து பிரித்துகாட்டமுடியுமென்பதுதான்
லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான ஒரு புதிய கத்தி போன்ற கருவி புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த புதிய கத்திகளைக் கொண்டு 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை 3 மருத்துவமனைகளில் 302 புற்றுநோயாளிகளிடம் பரிசோதனை செய்யப்பட்டது. மூளை, மார்பகம், லிவர், நுரையீரல் போன்ற இடங்களில் பாதிக்கப்பட்ட புற்றுநோய் திசுக்கள் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டன. இந்த கத்தியின் மூலம் புற்று நோய் பாதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் புற்று நோய் தாக்கும் அபாயம் பன்மடங்கு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த புதிய கத்தியை லண்டனில் பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதனை செய்து காண்பித்தனர் மருத்துவர்கள்.

எழுதியவர் : சாந்தி (21-Jul-13, 12:17 am)
பார்வை : 47

புதிய படைப்புகள்

மேலே