தீர்ப்பு கூறுங்கள்

தலை முறை ஒன்றில்
முறை தலையின்றிப்
புலப்பப்படும்
கலப்படம்.
காற்றின் கண்களை மூடி
கச்சிதமாக
மகரந்தச் சேர்க்கையில்
மண்போட்டவன் யார்?
தென்னம் பாழைக்
காவலரண் தாண்டி
கள்ளம் செய்தவன் யார்?
தேனீக்களே தீர்ப்பு
கூறுங்கள்!