இயற்கை

மலைமீதிருந்து
விழுமருவி இயற்கை ..
மழைத்துளிகள் மண்ணினூடே
கரைதல் இயற்கை..
தலைசாயும் நெல்மணிகள்
வயல்வெளி இயற்கை ..
தளிர்புற்கள் மீதுறையும்
பனித்துளி இயற்கை..
அலைகடல் வீசுகின்ற
குளுமை இயற்கை..
அன்றலர்ந்த மலர்கள்
வீசும்வாசம் இயற்கை..
கலையழகு மிளிரதோன்றும்
வானவில் இயற்கை..
கருமையிருள் போக்கவந்த
நிலவு இயற்கை !!

சோலைக்குயில் தானாய்ப்பாடும்
இராகம் இயற்கை ..
சோம்பல்முறித்து மெதுவாய்நகரும்
மேகம் இயற்கை
காலைதோன்றி மாலைமறையும்
சூரியன் இயற்கை ..
கன்னக்குழியோடு கைதட்டும்
குழந்தை இயற்கை ..
தொலைதூரத்தில் ஒளிவீசும்
விண்மீன் இயற்கை ..
தொடர்ந்தபடி ஆர்ப்பரிக்கும்
அலைகள் இயற்கை ..
நிலம் நீர் காற்று தீ வானம்
அனைத்தும் இயற்கை ..
நிலையற்ற வாழ்வதனில்
உதித்தபின் உதிர்தல் இயற்கை!!

வெ.நாதமணி
21/07/2013

எழுதியவர் : வெ.நாதமணி (21-Jul-13, 8:07 pm)
பார்வை : 132

மேலே