கதிரவன்..

கடலில் மலர்ந்த
காம்பில்லா பூ!
பற்ற வைக்காமல் எரியும் வட்ட விளக்கு!
சுடர்விட வெயில் திரியால் உறிஞ்சிக் கொள்கிறது.ஈர மண் எண்ணையை!
அன்றாடநிகழ்வை சகித்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறது மலையிலிருந்து குதித்து.!
மரித்த மறுநாளே உயிர்த்தவன் நீ!

எழுதியவர் : நித்லுவின் சேகரிப்பு.. (21-Jul-13, 11:10 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 64

மேலே