அவர்களுக்கு நீங்கள்,நாம் உங்களுக்காக!.....

எழுத்து நண்பர்களுக்கு வணக்கம்,

நாம் ஒரு உணர்ச்சி பூர்வமான நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது நமக்குளே ஒரு ஆற்றல் பிறக்கும்.நாமும் உதவவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.ஆனால் நமது சூழ்நிலைகள் கைகொடுப்பது இல்லை.
மேலும் இன்றைய காலத்தில் வேகம் மிக அதிகம்,அதை ஈடு கட்டவே நமது நேரம் சரியாக இருக்கிறது ....
இது ஒரு பக்கம் இருக்க,

மறுபுறம் பல ஆயிரக்கணக்கான உதவி மையங்கள் இருக்கின்றன,இருந்தும் நம் நாட்டில் இன்னமும் பல குடும்மத்தில் ஒருவேளை உணவுக்கே போராட்டம் தான் .

சரி இதற்க்கு நாம் என்ன செய்ய முடியும்?
என்ற கேள்வி எழும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நான் நம்புகிறேன்.
தமிழால் ஒன்று சேர்ந்த நாம்,அன்பாலும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மாற்றம்வரும்....

வேடிக்கையான ஒரு செய்தி சொல்கிறேன்,
சற்று சிந்தித்து பாருங்கள்.....
தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் என்ற பெயரில் வாக்கு சேகரிப்பார்கள்....எப்படி என்றால்?
ஒவ்வரு ஊருக்கும் ,தெருவுக்கும் ,பல இடங்களில் ஒவ்வரு வீட்டிற்கும் சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

இதே உதவுதல் என்று வரும் பொழுது
( உதாரணமாக )இந்த முகாம்,இந்த இடத்தில்,
இத்தனை மணிக்கு,இது இலவச முகாம் ....
மக்கள் தவறாமல் வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இது முறைய?
இப்படி ஒரு இடத்தை மைப்படுத்தி போடப்படும் முகாமில் பயனடைபவர்கள் யார்?
நடுத்தர மக்களே .....

இதை நீங்கள் மாற்ற விரும்பினால்...
நீங்கள் உதவுவது நேரடியாக இருக்கவேண்டும்...
மேலும் சரியானவர்களை தேர்வு செய்து உதவ வேண்டும்...

மேலும் நான் ஒரு அமைப்பை தொடங்க இருகிறேன்,அதன் பெயர்
"அடைக்கலம் விழுதுகள்"
என்று யோசித்து இருகிறேன் ...
இந்த அமைப்பின் பணியானது,
வறுமையில் உள்ளவர்களை,உதவும் நெஞ்சம் கொண்டவர்களிடம் நேரடியாக அடையாளம் காட்டுவது ...

மற்ற உதவும் அமைப்பை போன்று,
இதில் எந்தவிதமான பண மாற்றமோ அல்லது
பொருள்மாற்றமோ கிடையாது......

சரி!..நாம்,
என்ன செய்ய போகிறோம்!
எப்படி செய்ய போகிறோம் !..

நாம் முதலில் உதவ தேர்வு செய்தவர்கள் யார் என்றால்,
எதிர் பாராத விபத்தால் கை,கால்,மற்றும் இடுப்பிற்கு கீழ் செயல் இழந்த குடுமத்தளைவர்களின் கும்பங்களுக்குத்தான் தோழர்களே!.....
அவர்களின் பிள்ளையின் படிப்பிற்காக!....

நீங்கள் இதை படித்து விட்டு உதவ முன்வந்தால்,
அல்லது இந்த அமைப்பின் மூலம் உதவிபெற விரும்பினால்!...

உங்களுக்காக என்ற இந்த கணக்கில் தொடர்பில் இருங்கள்...

உணவு யார் வேண்டுமானாலும் வழங்கலாம்,
ஆனால்,படிப்பு நாம் தான் வழங்கவேண்டும்!...

மாறும் என்ற நம்பிக்கையுடன்!..
உங்களுக்காக......

எழுதியவர் : உங்களுக்காக (22-Jul-13, 2:25 pm)
பார்வை : 169

மேலே