அனுபவங்களும் ஆறுதல்களும்

அச்சத்தை - அணு
அளவும் வெளிக்காட்டாதே ...

விருப்பத்தை - அதற்கு
தகுதியானவர்களிடமே கூறு...

நிதானத்தை - உன்
வார்த்தையில் இருக்கட்டும்...

சோதனைகளை
சந்திக்க பழகிக்கொள்...

வேதனைகளை
அனுபவிக்க கற்றுக்கொள்...

அறிவுரை கூறாதே
அன்பை இழக்க நேரிடும்...

சந்தோசத்தை - உன்னை
சார்ந்தவர்களிடம் பகிர்ந்துக்கொள்...

உள்ளத்தை உரசிப்பார்த்த உறவுகளும் உண்டு
உண்மையாக நேசித்த அன்பர்களும் உண்டு...

விடைகளற்ற வினாக்கள் பல - நம்
வாழ்க்கையில் விடுகதைகளாக உண்டு...

முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாலும்
முடிவிலியாக தொடர்ந்து நிற்கும்...

வேண்டாம் என்று விட்டு விலகவும் முடியாது
விருப்பத்தோடு ஏற்கும் மனமும் இருக்காது...

பல தருணங்களில் விதி என்று
பயணம் செய்வதும் உண்டு...

தேன் சுவைக்க இனிப்பாகதான் இருக்கும்
குடிக்க நினைத்தால் தொண்டையை இறுக்கும்...

விடிவதற்குள் விழித்தெழு - உன்
விதிகளையும் மாற்றியமைக்கலாம்...

வலியும் ஒருநாள்
வலிமை இழக்கும்...

அழிவு என்பது எதற்கும் கிடையாது
மாற்றம் ஒன்றே அதில் நிகழ்ந்திருக்கும்...

போராட நம்மையே
பக்குவப்படுத்திக் கொள்வோம்...

எழுதியவர் : பிரான்சிஸ் சேவியர்.ஜோ (25-Jul-13, 2:36 pm)
பார்வை : 447

மேலே