சாளரத்திற்கு அப்பால் நீலவானம்
திறந்த சாளரத்திற்கு அப்பால்
தெரியும் நீலவானம் தரும்
அற்ப சந்தோஷங்கள்
வாசல் கதவை திறந்து உறவின்
வருகையை எதிர்பார்த்து ஏமாந்து
நனையும் கண்ணீர் விழிகள்
மெல்ல நகரும் நாட்கள்
முதுமைக் கூரையில்
தனிமைச் சிறை கைதிகளாய் ....
~~~கல்பனா பாரதி~~~