சாலைத்தேவதை
வாகனம் செலுத்துகிறாள் அவள்
வேகமுள் சுழற்றும் என் மனம்!!!
தீவிரவாதத்தின் அழகியல் சொல்லும்
அவள் முகம் மூடி மறைத்த அந்த
புண்ணியத்துணி!!!
சாலையின் மேடுபள்ளங்களில்
தடுமாறும் அவளோடு என் மனமும்!!!
அவளுக்கு எதிர்த்திசை நான் செல்லும்
சமயங்களில் எல்லாம் என்மனம் மட்டும்
மரை கழன்று போகும் அவள் திசையில்!!!
அரிதாய் அவள் கடைக்கண் பார்வை வீச
எனக்கான எரிபொருள் நிரம்பி
கைகள் விசைமுடுக்க
வேகமெடுத்து விரையும்
சாலையில் என் வாகனமும்
வானத்தில் மனமும் !!!