வீரிய லேகியமும் முனகல் இசையும்...

இரவு எனக்கு மிகவும் பிடித்த பொழுது..!!! சப்தங்களைத்
தொலைத்த பொழுதில்
எனது மூச்சுக் காற்றோடு
நான் உருவாக்கும் இசையில்
பலர் வருவர்...!

இரவு ......
துக்கங்களை தூக்கத்தில் .கரைக்கும்
நித்திர மாத்திரை தயாரிக்கும்
சத்திரச் சாவடி....!!

உறவுகளை உருவாக்கிட
காமன் சாசனம்
படைக்கும் சாமம்.....!!

வெளிச்ச நாற்றுக்களை
வீதியுள் விதைத்துவிட்டு
வீடுகளின்
மூலை முடுக்கு மேடையில்
இருட்டு நடத்தும்
மதன நாடகப் பொழுதுகள்.....!!

விடியும் விளிம்பில்
விதியும் மாறும்
என்றெண்ணி
பல மழலையர்
பசியில் படுத்துறங்க
விடைப் பெற்ற வெளிச்ச இடைவேளை ...!!

இரவு
என்னோடு பேசும் இரகசியங்கள் காத்திட
பகலை நான் விரும்புவதில்லை..!!.
இரவை அழைக்கும் மந்திரக்காரன் பகலென்பதால்
பகலை நான் வெறுப்பதில்லை...!!!

இரவு என்பதாவது :
விடியும் எனும் நம்பிக்கை அளிக்கும்
வீரிய லேகியம் --இளைஞர்களுக்கு...!!
முடிந்த முனைப்புகளின் கணக்கெடுப்பு
முனகல் இசைத்தொடர்-முதியவர்களுக்கு....!!!

(கவிஜியின் மூடு மந்திரம்-15 தந்த ஒற்றைச்சொல் பாதிப்பு )

எழுதியவர் : அகன் (25-Jul-13, 10:33 pm)
பார்வை : 91

மேலே