ஆடிப்பட்டம்

அன்பே!
ஆறுகளில் தண்ணீராய்
நிரம்புது!
வயலெல்லாம் உழவுவேலை
நடக்குது!
ஆடிப்பட்டம் தேடித் தேடி
விதைக்குது!
கோடி நன்மை எதிர்பார்த்துத்
துடிக்குது!

கடைகளெல்லாம் தள்ளுபடி
கொடுக்குது!
ஆடிச் சீர் செய்ய மாமன் மாமி
தவிக்குது!
புதுமணத் தம்பதிகள்
துடிக்குது!
பிரிவினை எண்ணி எண்ணித்
தவிக்குது!

ஆடிப் பட்டம் தேடித் தேடி
விதைத்திட்டால் ,
கோடிக் கோடி நன்மையாம்
கேட்டுக்கொள்!
நாம் மட்டும் விதைத்துவிடக்
கூடாதாம்!
சித்திரையில் பிள்ளை பிறக்க-
லாகாதாம்!

ஒருமாதம் உனைப் பிரிந்து
இருப்பதனால்,
உன் நினைவே அணு அணுவாய்
வதைக்குது!
கண்ணிரண்டும் கண்ணீரால்
நிரம்புது!
உன் வரவை எதிர்பார்த்துக்
கிடக்குது!

எழுதியவர் : கோவை ஆனந்த் (26-Jul-13, 8:45 pm)
Tanglish : aadippattam
பார்வை : 79

மேலே