தோழன்

பள்ளியின் எங்கோ ஒரு மூலையில்
இருக்கையின் ஓரத்தில்
கொன்றை மரத்தடியில்
ஒற்றை குடையின் கீழ்
நான் தொலைத்து விட்ட
நட்பின் நினைவுகளை
இன்று மீட்டு கொண்டேன்
உன் நட்பின் மூலம்
உறங்கும் போது இரவு வணக்கமாய்
விழிக்கும் போது காலை வாழ்த்தாய்
மதியமோ சாபிட்டாயா என்று
செல்லக் கண்டிப்பாய்
மாலை நேரம் களைப்பா என்று
மடி சாய்த்து கொள்ளும்
அன்னையின் அரவணைப்பாய்
சகல பரிணாமங்களிலும்
என்னோடு சேர்ந்தே பயணிக்கிறது
உனது நட்பின் நினைவுகள்
காதலென்று கை பிடிக்க யார் வந்தால் என்ன ?
நட்போடு தோள் சாய்க்க
நீ தோள் தருவாய் என்றெண்ணி
குதூகலிக்கிறது மனது
தனிமையில் தவிப்பதில்லை நான்
வேண்டுமானால் எட்டிப் பாரேன்
பேருந்தின் என் ஜன்னலோர இருக்கையில் கூட
கொஞ்சம் நகர்ந்தே அமர்ந்து கொள்கிறேன்
உன் நட்பின் நினைவுகளுக்கு
இடம் கொடுத்து
எல்லாம் தோழா உன்னாலே .

எழுதியவர் : devirama (26-Jul-13, 8:10 pm)
சேர்த்தது : devirama
Tanglish : thozhan
பார்வை : 60

மேலே