அவளோடு நான்

பார்த்து பார்த்து பழகிய அவள்
பார்க்க நினைத்தும் பார்க்க மறுக்கிறாள்
பேச துடிக்கிறாள் அருகில் சென்றால்
ஓடி செல்கிறாள் அவள் குடும்ப சூழலால்.

அது தான் சொர்க்கம் என்று
அப்போது புரிந்து கொண்டேன் -
அவள் தான் தங்கம் என்று
அவள் நடத்தையில் புரிந்து கொண்டேன்.

பாலைவனத்தில் பாயும் நீருற்றாய்
என் உள்ளத்திலும் பாய்ந்தது ஓர் ஊற்று
அவள் பார்க்கின்ற பொழுதல்ல
அவளை நினைக்கும் பொழுதெல்லாம் .

அவளிடம் வறுமையிலும் பொறுமை
எளிமையில் தூய்மை
ஏழ்மையிலும் உண்மை
அணிகலனாய் கண்டேன் .

அவள் எனக்கு மனவியாய் இல்லாவிடில்
கவலை ஒன்றும் இல்லை .
அவளின் நினைவோடு இருப்பதே
சொர்க்கம் தானே .

எழுதியவர் : செபஸ்டின் (27-Jul-13, 3:35 pm)
சேர்த்தது : செபஸ்டின்
Tanglish : avalodu naan
பார்வை : 68

மேலே