காசு தந்து உதவி செஞ்சா .................

ஒருத்தர் காசு தந்து உதவி செஞ்சா
நாம காலமெல்லாம் அடிமை – இது

உறவில் தொடங்கி உரிமைகொண்டு
உறவு முறியும் நாள் வரையில்

பெரிய குடும்பம் பாசம் இல்லை-இது
வேஷம் போடும் சமயம் பார்த்து

பாசம் எல்லாம் உதட்டளவில்-இன்னும்
பகடுக்காக பெருமை பேசும்

இல்லாததை சொல்லி கொடுத்து – இனி
இன்பம் காணும் ஒரு கூட்டம்

இருக்கும் வரை பிடுங்கி தின்ன – இந்த
கூட்டம் போடும் பல வேஷம்

இனி தனக்கு என்று உறவை கூட்டி
ஒதிங்கி போக போடும் கணக்கு

உறவுகளின் உண்மையை ஒரு நாள்
இறைவன் அறிய செய்வான் நமக்கு

அன்று புரிந்து போகும் நமக்கு – நம்
மனதில் போட்ட மன கணக்கு

சொந்தங்களுக்கு மனம் கொள்ளாது
நம் வாழ்வின் உயரும் காட்சி

நாளெல்லாம் அடிமையாக இருக்க
உள் மனதில் தோன்றும் மகிழ்சி

வாழ்க்கையின் ஏற்ற தாழ்வு தருவது
படைத்த அந்த வல்லவன் தான்

மனம் திறந்து நம் தேவைகளை –இன்னும்
மனம் உருகி தொழுது கேட்போம்

-ஸ்ரீவை.காதர-

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (27-Jul-13, 10:13 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 40

மேலே