முப்பொழுதும் உன் கற்பனை ஐஸ்
ஐஸ்
நான் காலை வேளையில்
எழும்போது என்னை
செல்லமாக தட்டி தட்டி எழுப்பும்...
உன் நினைவுகள்
நான் எழுவதற்கு
முன்னாடியே !
எழுந்து என் கால்
விரல்களில் சோம்பல் முறிக்கும்...
உன் நினைவுகள்
நான் எழுந்து
குடிப்பது ஐஸ் காப்பி
உன் விரல்களில் தான்
தேயிலை பூக்குமோ !
நான் முகம்
கழுவதொடுவது
ஐஸ் வாட்டர் உன்
பதங்களில் தான் சுரக்குமா !
காலை உணவு
சாப்பிட அமர்ந்தால்
என் கண்கள் சாப்பிடுவது
உன் கன்னங்களை மட்டுமே !
கை கழுவ
தண்ணீர் சிந்தினால்
என் விரல்களில் இருந்து
விழுவது ஐஸ் கட்டிகள் அன்பே !
அலுவலகம் செல்ல
அம்மாவிடம் பணம்
வாங்க ஐஸ் வைக்கிறேன்
தங்கையிடம் ஐஸ் கட்டியே வைக்கிறேன்
வீதியில் நடக்கையில்
ஐஸ்காரன் உடன்
சேர்ந்து நானும் ஐஸ் விக்கிறேன்
அம்மா ஐஸ் அண்ணா ஐஸ்
அலுவலகம் வந்ததும்
உன்னை பார்த்ததும்
ஐஸ் கட்டியாய் உருகி போகிறேன்
உன் ஓர கண்ணால் என்னை
பார்த்துக்கொண்டே
நீ காதோர மூடி கோதுகையில் !!
எனக்குள் ஒரு கேள்வி ?
ஐஸ் தானே எப்பயும்
உருகும்
ஐஸ் பார்த்ததும்
நான் ஏன் உருகி போகிறேன் !
மாலை வந்தது
எல்லாருக்கும் டி பிரேக்
எனக்கு மட்டும் ஐஸ் பிரேக்
எல்லாரும் டி காப்பி
சாப்பிடும் போது
நான் மட்டும் ஐஸ் கிரீம்
சாப்பிடுகிறேன்
என் ஓரக்கண்ணில்
உன்னையும் கொஞ்சம்
சாப்பிடுகிறேன்
கொஞ்சம் காதல்
கொஞ்சம் ஐஸ் கிரீம் !!
அலுவலகம் முடிந்து
செல்லும் வழியில்
ஐஸ் கட்டி மழையில் நனைகிறேன் !
உன் பாத சுவடுகள்
பின்னல் நடக்கையில் ...
உன்னை வழி அனுப்பி
விழி பிதுங்கி நிக்கிறேன்
மெதுவாக சின்ன குரலில்
ஐஸ் ஐஸ்
நீ திரும்பவில்லை
நான் நடு வீதியில்
ஐஸ் வைக்கிறேனா ? இல்லை
விக்கிறேனா ?
சூரியன் குளிர்ந்து
ஐஸ் தங்கை வந்துவிட்டால் !
ஆனால் ! எனக்கோ
தூக்கம் வரவில்லை !
ஐஸ் விழும் இரவில்
எத்தனை முறை
இழுத்து போர்வை போர்த்தினாலும் !
உன் நினைவுகள்
என் போர்வை இழுக்கிறது
குழந்தை போல்
உன் நினைவுகள்
என் இமைகளை
தூங்க விடாமல் கயறு
கட்டி இழுக்கிறது !
உருண்டு பெரண்டு
படுத்தாலும் கனவில்
வந்து சிரிகிறது
உன் நினைவுகள் ...............
குட் நைட்
ஐஸ் ட்ரிம் !!