வாழ்க்"கை"த் தருவாயோ?
யாருமில்லா கடற்கரை
காதல் கொண்ட கால்களின் நடை
எனக்கு பிடித்த அந்தி வானம்
கண் சிமிட்டும் அந்த நாணம்
பாரம் என்று நினைக்காத உன் மடி
பாசம் அது என் அன்னைக்கு ஒத்ததடி
என் தலைக்கோத உன் விரல்கள்
நமை கொஞ்சும் நம் நிழல்கள்
உன் முகம் தனை என் தோள்களில் சாய்த்திருபேன்,
இல்லையெனில் இதற்காகவே காத்தே இறப்பேன் !!!
எனை ஆளும் உன் பெண்மையால் ,
முதன் முதலாய் கருத்தரித்திடும் என் ஆண்மை !!!
உன் வாசம் நுகர,
என் வாழ்வை பகிர பிறந்த நான்,
உன் மார்புகுள்ளே மாண்டு தான் போவேனோ???
இல்லை உன் சொல்லில் மீண்டு தான் வாழ்வேனோ ???