கரப்பான் பூச்சியை ஒழிப்பதற்கான வழிகள்!!!
எளிமையான சில இயற்கை முறைகளை கொண்டு கரப்பான் பூச்சியை எப்படி விரட்டுவது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி வந்தால், நிச்சயம் கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
1) கரப்பான் பூச்சித் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டுமெனில், வெள்ளரிக்காயை பயன்படுத்தினால் வராமல் தடுக்கலாம். அதற்கு வெள்ளரிக்காயின் தோலை, ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால், அதிலிருந்து வெளிவரும் நாற்றத்தினால், கரப்பான் பூச்சிகள் வருவதை நிரந்தரமாக தடுக்கலாம்.
2) பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை நல்ல பூச்சி விரட்டியாக செயல்படும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் தூவினால், இனிப்புக்காக வரும் கரப்பான் பூச்சிகள் சர்க்கரையுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து சாப்பிடுவதால், இறந்துவிடும்.
3) சமையலில் மணத்திற்காக பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செய்து, அதன் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் தூவினால், பிரியாணி இலையின் மணத்திற்கு கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதோடு, அதனை சாப்பிட்டால் கரப்பான் பூச்சி இறந்துவிடும்.
4) சோப்பு தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு கரப்பான் பூச்சிகள் வராது. எனவே கரப்பான் பூச்சி வரும் இடங்களில் சோப்புத் தண்ணீரைத் தெளித்தால், கரப்பான் பூச்சிகள் வராமல் இருப்பதுடன், வந்தால் இறந்து விடும்.
5) கரப்பான் பூச்சியின் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமெனில், ஒரு வாளி நீரில், 2 கப் அம்மோனியாவை சேர்த்து கலந்து, பாத்திரம் கழுவும் தொட்டியைக் கழுவினால், அம்மோனியாவின் வாசத்திற்கு கரப்பான் பூச்சிகள் நிரந்தரமாக வருவதை தவிர்க்கலாம்.
6) மிகச் சிறந்த கரப்பான் பூச்சி விரட்டி என்றால் அது மாவு தான். ஆம், எப்படியெனில் மாவு உருண்டையில் சிறிது போரிக் ஆசிட் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைத்தால், கரப்பான் வருவதை தவிர்க்க முடியும்.
நன்றி ;அமர்க்களம் தளம்