அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ள 1000 ஆண்டு சிறைத் தண்டனை...மாபெரும் கேலிக் கூத்து...?

அமெரிக்காவில் க்லிவ்லாந்து பகுதியில் 3 பெண்களை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அதன் பிறகு 1000 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு காஸ்ட்ரோ என்பவன், 3 பெண்களை கடத்திச் சென்து தனது வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்தான் மேலும் அவர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயலாமல் இருப்பதற்கு, மிகக் கொடூரமாக தாக்கி துன்புறுத்தி வந்தான். இவனது காவலில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர், அந்த பெண்களை மீட்டனர்.
இது குறித்து வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், காஸ்ட்ரோவுக்கு ஆயுள் தண்டனையும், அது முடிந்த பிறகு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
குற்றவாளிக்கு தண்டனை சரி...அது என்ன ஆயிரம் ஆண்டு சிறை....வழக்கமாகவே அமெரிக்க நீதிமன்றங்களால் இது போன்று அறிவுக்கும் சமூகத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் தண்டனை வழங்குவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளார்கள்...
இவர்களின் அரசியல் ஆசான் மாக்கிவெல்லி கூட இவ்வாறு கூறியதில்லை...அந்த அளவிற்கு மனிதர்களை வாட்டி வதைக்கும் தன்மையை கொண்டுள்ளன அமெரிக்க குற்றவியல் தண்டனையும் தீர்ப்பும்...?
சங்கிலிக்கருப்பு