எவ்வாறு செலுத்துவேன் என் கண்ணீர் அஞ்சலியை???????????
என் நாள்காட்டியைச் சற்று
பின்நோக்கித் தள்ளுகிறேன்
நாள் ஜூலை 18 புதன்கிழமை
இனிய நாளாgகத் தான் விடிந்தது
ஆனால்
இனிய நாளாக மறையவில்லை
அன்றிய மாலைப் பொழுது எனக்கு
இனிப்பாய் இருக்கவில்லை!!!
அனைத்து ஊடகங்களிலும்
அவசரமாய் கண்ணீர் உடன்
கதறிய ஒரு செய்தி
கற்றை கற்றையாய் இருட்டைக் கக்கியது
ஆம்!
அது!
கவியரசர் வாலி மறைந்த
செய்தி
உள்ளத்தில் பொங்கியது
ஓராயிரம் உணர்வுகள்
அந்த கவி ஆகயத்திடம்
நான் கண்ட அதிசயங்களை
எல்லாம்
என் எழுத்து உளியால்
வடிவமைத்தேன்
எழுதி முடித்த உடன்
கண்ணீராய் பொழிந்தேன்
அக்கவிதையை !!!
எங்கள் கவிக்கூடம் கலைந்தது
செந்தமிழ் சாறெடுத்து
தித்திக்கும் தேன் குழைத்து
சாந்தமாய் பேசி ரசித்து
பலகோடி மக்கள் நெஞ்சில் வேந்தனாய்
பவனி வந்த வெற்றிக் கவிஞனே!!
தமிழனே!!
ஏற்றினாய் தீபம் ஒன்று
எந்நாளும் அழியுமோ!!
தவம் என பெற்றாலோ?
தமிழன்னை உன்னை இங்கே ??
எவருண்டு உன் தமிழை எள்ளளவும்
நகல் எடுக்க
நவரசக் கவிஞனே
உன்னைப் பூலோகமே அறியுமே!!!
தடையற்ற வெள்ளம் போல்
தமிழ்ச் சொல் நீ வீசி
படையெடுத்து நின்றவன் உன்
பார்புகழ் தனியுமோ??
தனியனாய் நின்று
தங்க தட்டெடுத்து
இனியது தமிழென வழிமொழிந்த
கவிஞனே! தமிழனே !
இனிதெனும் தமிழில்
ஈடற்ற வாழ்வில்
பனிமலர் தூவி போற்றினால்
தமிழ் அன்னை உன்னை !!
இவ்வுலக மாந்தருக்கு நீ
கவியையா காட்டினாய்??
வண்ணத்திரையின் பாடல்களில்
நீ வாழ்க்கையை அல்லவா காட்டினாய்!!
சின்ன அசைவையும் கவி உணர்வோடு
பார்த்துப் பொன்னாய் மின்னினாய்
ஆன்றோருக்கும் வாழ்வோருக்கும்
அகராதியாய் விளங்கினாய்!!!
வான் தொடு உயரத்தில்
வெற்றித்திரி சுடர் நீ
தேன்வளர் கவிக்கலைஞர்
தேடும் பொற் களஞ்சியம் நீ !!
மங்காத புகழ் பெற்றாய்
மறையாத நிலை பெற்றாய்!!
எங்கெல்லாம் கவி உண்டோ
அங்கெல்லாம் செழிக்கிறாய்!!
கண்ணீர் பொங்குதையா
கண்ணீர் பொங்குதையா
காலன் உன்னை கவர்ந்தானே!!
உன்னத கலைஞர்களை
உருவாக்கும் தலைவனே
உன்புகழ் வாழ்க வாழ்க !!
உனக்கு என்றும் மரணம் இல்லை!!!
உடல் மட்டும் மறைத்த உனக்கு
எவ்வாறு செலுத்துவேன் என் கண்ணீர்
அஞ்சலியை???????????