கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
வானம் அளந்தான் வண்ணக் கண்ணன்
வழங்கவே நிறம் நீலம் என்று
வந்தது ஏன் என் நீச்சல் குளத்தில்
வாய் விட்டு சிரித்து என்னுடன் விளையாடவோ ?
குதூகலித்த குழந்தையென நான்
கும்மாளமிடுகிறேன் நீருக்குள்ளே........
சரணாகதி அடைந்ததாய் ஒரு
சந்தோசம் மனசுக்குள்ளே........
கடவுள் எங்குதான் இல்லை
கண்களிலே கருணை கொண்டால்....?!!!