உன்னை நீ ஒளிப் பிரவாகமாய் மாற்று
இமயம் என இருந்து விட்டால்
எதிரொலியை படைக்கலாம் நீ.....!!!
எதிராளியின் மனம் திருத்தி
இனிது சொல்ல வைக்கலாம் நீ......!!!
பிரவாகமாய் ஒளி பிரதிபலி நீ....- நீ
பின்வாங்க எந்தக் காரணமுமில்லை இனி...!!!
தன்னிலை புரிந்துயர்ந்தோர்.....
தரணி பயில வேதமாகிறார்......
தான் மறைந்த போதும்......
தன் செயலால் பாடமாகிறார்......!!!