@@@முகமற்ற முகமூடிகள் @@@
பறந்து விரிந்த உலகு தன்னில்
பாசாங்கு கட்டி வாழ்பவர் தன்னில்
நேசமெல்லாம் எங்கோ போயிற்று
வேசமட்டுமே என்றும் வாழ்வாயிற்று
புறம் தன்னில் கற்கண்டாய் நடிக்குது
அகம் தன்னில் பார்த்தால் ஈ மொய்க்குது
செய்யக்கூடா பாவமெல்லாம் செய்துவிட்டு
செய்கிறான் பரிகாரம் கடவுளுக்கு
மேடை தன்னில் வீர முழக்கமிட்டவள்
வீட்டிற்க்குள்ளே கணவனுக்கு அடிமையாய்
ஆன்மிகத்தில் துறவு என்று பூசிப்பவன்
அறைக்குள்ளே அரக்கன் காமுகனாய்
அன்புள்ளம் பற்றி அடுக்காக மேடையில்
அன்பு பேச்சு பேசியவனின் பெற்றோர்
ஆதரவற்றோர் இல்லத்தில் அனுதினமும்
ஆதரவுகாட்டி அன்புக்கு ஏங்கும் அவலம்
பள்ளியில் பாடம்கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்
வீட்டில் தன் குழந்தையிடம் முட்டாளாய்
இரவெல்லாம் எங்கென்று கேட்க்கும்
தாயிடம் சிடுமுகமாய் எரிந்துவிழுபவன்
இரண்டு நிமிடம் தாமதமென சொல்லும்
காதலியிடம் அழுமுகமாய் கொஞ்சுகிறான்
அன்பு மனைவியிடம் புலியென சீறுவான்
அலுவலகத்தில் அதிகாரியிடம் பூனையாய்
வாசலில் நாயிடம் கொஞ்சி உணவூட்டுகிறாள்
வீட்டில் உறவினருக்கு பரிமாற முகம்சுளிக்கிறாள்
ஏழையென்றிருக்க செல்வத்தை புகழ்கிறார்கள்
செல்வந்தரானபின் ஏழ்மையை கேலிக்கிறார்கள்
எத்தனென்றும் பித்தனென்றும் இங்குபலர்
உண்மையில் மனிதனென்று ஒருசிலர்
இந்த உலகில் இல்லாத முகத்திற்கு
நாம் ஏன் அணிகிறோம் முகமூடி...
...கவியாழினிசரண்யா ...