தற்கொலை செய்ய நீ யார் ...?

தற்கொலை செய்ய நீ யார் ...?
உயிர் தந்தது தந்தை
உடல் தந்தது தாய்
மூச்சு தருவது காற்று
உணவுதருவது தாவரம்
அறிவை தருபவர் ஆசான்
ஆரோக்கியம் தருவது இயற்கை தாது
உணர்வு தருவது தாய் தமிழ்
*
*
*
இப்படி நீ முழுவதும் பிறர் சொத்தில்
வாழ்ந்துகொண்டு இருக்கும் நீ
எப்படி பிறர் சொத்தை சேதமாக்குவாய் ...?
யாரை கேட்டு தற்கொலை செய்கிறாய் ...?
தற்கொலை செய்ய நீ யார் ...?

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jul-13, 9:48 am)
பார்வை : 105

மேலே