நான் யார் ?

என் முன்
நானே நின்றேன் ..!..?
எதிரே கண்ணாடி !

ஒருநாள் வாழ்வு
உற்சாகமாக சிரித்தது..
பூ!

சிந்தி கிடந்தது வைரங்கள் ..
எடுத்துக் கொள்ள யாருமில்லை..!...?
நட்சத்திரங்கள்!

படிக்க..
எழுத..
எண்ண இனிக்குது..
தமிழ்!..

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி ந (30-Jul-13, 7:24 pm)
பார்வை : 112

மேலே