ஆனந்தமே ஆனந்தமே... .

தாவி விழுந்தாய்
தழுவிச் சென்றாய்..
தனித்ததோர் சுகமும் தந்தாய்
இன்னும்..இன்னும்.. என்னுமோர்
அடங்கா ஆசையை என்னுள் விதைத்தாய் !
கொப்பில் ஆடும் குரங்கு கூட்டம்
குழந்தைகள் போடும் குதியாட்டம்
சிறுசும் ..பெருசும் ஒன்றாய் நின்று
கூச்சல் போடும் குதுகுலம் வைத்தாய்.
சொர்க்கம் என்பதை
உன்னில் கண்டேன் !
எந்தன் குழந்தையை அழைத்து வந்தேன்..
நானே குழந்தையாய்
மாறிவிட்டேன்!அருவி மகளே
உன்னுள் கிடைத்த
ஆனந்த சுகத்தை எப்படி சொல்வேன் ?























1.

எழுதியவர் : ந.ஜெயபாலன், திருநெல்வேலி nag (30-Jul-13, 7:10 pm)
பார்வை : 109

மேலே