சோப்பு போட்டு குளிக்கணும் சாமி
சோப்பு போட்டு குளிக்கனுமாம்
சொல்லிப் புட்டா எங்க அம்மா
மழலை மனசு சுத்தமம்மா
மறுபடி எதுக்கு சோப்பு என்றேன்
பொல்லாத உலகமடா அதுக்கு
புற அழகு போதுமடா.......
அக அழகு நாற்றமெல்லாம் இங்கு
புற விழிகளுக்கு புலப்படாததடா என்றாள்
குளிக்கிறேன்......நாடக மேடைக்காக....நான்...!!!