ஆழ்ந்த உறக்கம் ஒரு ஆனந்த தவம்
ஆழ்ந்த உறக்கத்தில் நான்....
ஆண்டவனாய் உணர்ந்தேன்....
ஆனந்த தவம் அது
ஆஹா என்ன சுகம்..?
எண்ணங்கள் எதுவும்
என்னிடம் இல்லை....!
ஏனோ கனவும்
என் நினைவில் இல்லை...!
கூடு விட்டு கூடு பாய்ந்ததாய்
குதூகலமாய் இன்ப உணர்வு.....
சுயநலம் இல்லை
சுடும் வார்த்தை இல்லை...
கருவறைக்குள் மீண்டும் சென்று - தமிழ்
கவிதை படிப்பதுபோல் மகிழ் நினைவு....
குழந்தையாக மீண்டும் மாறுகிறேன்...
குமுதம் போல் இதயம் உணர்கிறேன்.....
குட்டினாள் நச்சென்று என் மண்டையின் மனைவி
குறட்டையை பாரு காண்டா மிருகமாட்டம் என
தூக்கம் போச்சு......மறுபடியும்......
இனிய இம்சையாய் மனைவியின் குறட்டை....!!!