எதிர்காற்று

வீசட்டும் எதிர்காற்று
எதிர்கிறது புது நாற்று
பூக்கட்டும் புதிர் போட்டு
விதைத்தவனின் விளையாட்டு

தூங்காத விதை ஒன்று
ஏங்காதே, வரும் வென்று
தாங்குகின்ற வலி இன்று
ஓங்கி நிற்கும் ஒளி தின்று

முட்டி மோதும் எதுவுமே
எட்டி பிடிக்கும் வானமே
இருண்ட வானம் விடியுமே
கலைந்த கனவும் மலருமே

திட்டித் தீர்க்கும்
வெடித்த மண்
கொட்டிக் கோர்க்கும்
துளிர்த்த துளி

முடங்காத மனம் வேண்டு
முடியாதா, மலை தோண்டு
மூச்சென்பதே முயற்சி தானே
முப்போழுதே, பயிற்சி தானே

விளையாடு விதியோடு
நீ
விதையாகி புதிர் போடு.........

எழுதியவர் : கவிஜி (31-Jul-13, 10:32 am)
பார்வை : 134

மேலே