கனா காணும் காலம்

மீண்டும் கல்லூரியில் :

தனியே காலடி எடுத்து வைக்க மனமின்றி, ஏறிட்டு பார்க்காத இடத்தில் காலடி எடுத்து வைத்தேன்... சூழ்நிலையால்!!

சூழ்நிலை கட்டிப்போட ஒவ்வொரு நொடியும் வந்து போனது கடந்து போன நிஜங்கள்.. நினைவுகளாய்!!

அசை போட கிடைத்த அழகான நிமிடங்கள் பொக்கிஷமானது. குறும்புகள், கேலிகள், கிண்டல்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள். சண்டைகள் எல்லாம் கனவாகி கண்முன்!

பதிக்கப்பட்ட ஒவ்வொரு வரியும் வலிகளுடன் ஒலித்தது... தாங்கி கொள்ள முடியாத உணர்வின் வலி!

கடந்து செல்லவே மனம் எத்தனித்தாலும் சூழ்நிலை ஒருமணி நேரம் காடிவாளமிட்டு கட்டி போட்டது.

சந்தோஷமும்,வேதனையும் ஒன்றாக கிடைக்க தவித்ததோ உள்ளம் ஒன்றே!

மனதை மாற்ற நினைத்தாலும் முடிவதில்லை... கல்லூரி காலங்களை நினைக்கும் போது!

அது ஒரு நினைவில் மட்டுமே வாழும் அழகான காலம் தான்!!!!

எழுதியவர் : மலர் (1-Aug-13, 3:27 pm)
பார்வை : 75

மேலே