ரத்தத்தில் அவள் மட்டும்

சிவப்பு அணுக்களில்
சின்ன குறைபாடு..
சில்லரை கொடுத்து ஒரு
சின்ன மாற்றம் தேவையே இல்லை...

மருத்துவன் கொடுத்த
மருந்தை ஏற்க
மனம் மறுத்து விட்டது...


உன் மனம் போல்
வெள்ளை காகிதத்தில்
உன் பெயர் எழுதி
விழுங்குகிறேன்....


உன் பெயர் கலந்த
இதயத்தில்
இரத்த எரிமலை...


என்னால் கேட்க முடிகிறது
சிவப்பு அணுக்கள்
இப்பொழுதெல்லாம்
உன் பெயரை மட்டுமே சொல்கின்றன.....

எழுதியவர் : snehidhan (22-Dec-10, 7:04 pm)
சேர்த்தது : Andrews
பார்வை : 354

மேலே