எமராசா வந்த கதை ..!
எம ராசா ஒருநாள் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது திரண்டு இருந்த கூட்டத்தை பார்த்து "யாருக்கெல்லாம் சொர்கத்துக்கு போக ஆசை இருக்குனு" கேட்டார்.
நாங்க எல்லோரும் கையை தூக்கி காட்டினோம்.
"அடடா.. பரவயில்லையே எல்லோருக்கும் சொர்கத்துக்கு போகணும் ம்..ம்..பலே....!"
சரி "யாரெல்லாம் இப்போது சாவுறதுக்கு ஆசை படுறீங்க"னு அடுத்த கேள்வியை கேட்டார்.
அவ்வளவுதான் யாரும் கையை தூக்கவில்லை. நான் மட்டும் கையை தூக்கினேன்.
'என் நீ மட்டும் மரணத்தை விரும்புகிறாய்..?' எம ராசா என்னை பார்த்து கேட்டார்.
"அப்போதுதானே சொர்கத்துக்கு போக முடியும்.." நான் சொன்னேன்.
"தெரிந்து கொள்ளுங்கள் சாகாமல் சொர்கத்துக்கு போக முடியாது" கூட்டத்தை பார்த்து சொன்னார்.
"அது எங்களுக்கும் தெரியும். நாங்கள் சாகும்போது சொர்கத்துக்குதான் வருவோம். அதனாலே காலம் வரும் போது சாகிறோம்" அப்படின்னு கூட்டம் எம ராசாவை பார்த்து சொன்னது.
"அதெப்படி உறுதியாக சொல்கிறீர்கள்..?" எம ராசா கேட்டாரு.
அதுவா "நாங்கள் இப்போது நரகத்தில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனாலே இறந்தபிறகு சொர்கம்தான் கிடைக்கும்" கூட்டம் சொன்னதை கேட்டு எம ராசா அசந்து நின்னுட்டாரு..!
சரி 'அப்படினா நீயும் உன் காலம் வரும்போது வந்துசேருனு' சொல்லி என்னை விட்டுவிட்டு புறப்பட்டு போனாரு.
நான் அவர் பின்னாடியே 'நானும் வாரேன்னு' கையை தூக்கி கொண்டே ஓடுகிறேன்.
நாடு ராத்திரியில் 'அம்மா'ன்னு சத்தம் கேட்டு வீட்டார் ஓடி வந்தபோது நான் கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடக்கிறேன்.
கண்டது கனவு என்று உணர சற்று நேரம் பிடித்தது..!
அப்புறம் கையில் கட்டோடு ஒருவாரம் படுக்கையில் ஓய்வு...இது கனவு இல்லை நிசம்..!