தமிழனென்று சொல்லுவோம்!

தமிழ னென்று சொல்லுவோம்.
தலை நிமிர்ந்து செல்லுவோம்.
உரிமை முரசு கொட்டுவோம்.
ஒன்றாய்க் கை தட்டுவோம்.
தமிழுக்காக வாழ்கிறோம்
தமிழுக்காக மாள்கிறோம்.
ஈழத் தமிழர் நாங்களாம்.
என்றே பறை முழக்குவோம்.
மனசுள்ள தமிழன்றோ!
மானம் நமது மூச்சன்றோ!
இனம் அழியப் பார்க்குமோ!!
இந்த உயிர் இருக்குமோ!
உடன் பிறந்த இரத்தமோ!
உரிமை காக்கச் சிந்தாதோ!
கடன் பட்டுத் துடிக்காதோ!
கயவர் தேடி முடிக்காதோ!
தப்பும் பிழை செய்யுமோ!
உப்புநீரில் மூழ்குமோ!
தடம் அழித்து மறையுமோ!
உடம்பொளித்து உய்யுமோ!
நீலக்ககடல் நிறம் மாறி
செங்கடலாய் ஆனாலும்
ஈழம் பெற அஞ்சுமோ!
வாழும் தமிழ் கெஞ்சுமோ!
கொ.பெ.பி.அய்யா.