நடந்து பார்...
நட்பின் உளம் உணர
நிழலாய் நட..
கவிதையின் களம் தொட
கனவினில் நட...
புரட்சியில் புயல் அடிக்க
பாரதியாய் நட...
தோல்விகண்ட நீ துவலாமல்
துணிவுடன் நட...
வீழ்ந்தாலும் உடன் எழுந்து
சிலிர்ப்புடன் நட..
வெற்றியில் விண்ணைத் தொட
வெறியோடு நட...
முன்னேற்ற பாதை ஏற
முந்தி நட...
புகழின் உச்சம் தொட
மனிதனாய் நட...
இரக்கத்தின் ஈரம் உணர
இறைவனாய் நட...