நன்றி கெட்ட உலகமிது

நன்றி கெட்ட உலகமிது
நல்லவர்கள் குறைந்த உலகமிது
பொய்யாய் பழகும் மனித உறவுகள்
பொய்த்து போகுது உண்மையில் ஒருநாள் ......

இருப்பதை எல்லாம் கொடுத்த போதும்
இயன்ற அளவிற்கு உதவிய போதும்
நினைத்து வாழவேண்டிய நன்றி அதனை
மறந்து போவதுதான் மரண கொடுமை .......

நீதான் உயர்தவரென்று உன்னை போற்றி
காரியம் சாதிப்பவர் பலபேர் உண்டு
எல்லாம் நடந்து முடிந்த பின்பு
நீயார் என்று கேட்ப்பார் அவரே .........

ரத்தம் கொடுத்து உதவிய போதும்
சப்தமில்லாமல் வேடிக்கை பார்பார்
சுயநலம் தேடி உன்னை நாடும்
சுயரூபம் அதனை மெல்ல உணர்வாய் .......

கேடுகெட்ட உலகம் இது
கெட்டவர்கள் நிறைந்த உலகமிது
துன்பத்தில் உதவ யாருமில்லை
இன்பத்தில் வந்து பகிர்வார் பலபேர் ........

கதையினில் வரும் நரியும் காக்கையும்
தந்திர நரியினால் ஏமாறும் காக்கைகள்
பலபேர் நிலைமை இதுதான் இன்று
உணர்ந்து வாழ்வாய் உலகத்தை அறிந்து ........

அப்பன் உறவும் அண்ணன் தம்பியும்
அனைவரின் மையமும் பணத்தை நோக்கியே
இருப்பதை பிடுங்க ஏராள நடிப்பு
இழந்த பின்னாலே என்னையா வியப்பு ........

பொதுநலம் இன்றைய உலகினில் இல்லை
சுயநலம் மட்டுமே செழிப்பாய் வாழுது
தன்னலம் போற்றும் மனிதர்களுக்கு இடையில்
உன்நலம் நாட எவரும் இல்லை ........

இருப்பதை எல்லாம் பிடுங்கும் உலகத்தில்
கொடுத்து உதவும் நெஞ்சங்கள் உண்டு
செய்த செயல்களுக்கு நன்றியை மறந்தால்
செய்வதறியாது நிற்ப்பான் மனிதன் ..........

பழுக்க காய்ச்ச இரும்பும் இறுகும்
தும்பம் வந்தால் மனிதம் தெளியும்
உண்மையை உணர அனுபவம் தேவை
உணர்ந்த பின்னே மனிதன் மேதை ........

நயவஞ்சக உலகம் இது
நன்றி கெட்ட உலகம் இது
நல்லவர்களை புரியாத உலகம் இது
நன்மைகள் தெரியாத உலகம் இது .............

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Aug-13, 7:06 pm)
பார்வை : 9354

மேலே