நட்பின் முகவரி
******நட்பு ****
பாசத்தின் பண்பின்
அன்பின் அமைதியின்
அசையாத அடையாளங்களே !
புரிதலின் அசையா பரிமாற்றம்
பகிர்ந்து உணர்தலில்
அழகான வெள்ளோட்டம்...!
காலை சூரியனோ
மாலையில் சந்திரனோ
உதிப்பதும் மறைவதுமில்லை...!
நிலையாய் நிற்கும்
வானம் அது
உணர்தலின் பரிமாற்றம்...!
ஒரு வரி நீ
என்றால் அது
நான் ஒரு வரி என்று ...!
திருவள்ளுவரின் .
திருக்குறளைப் போல
என்றும் நீங்காது....!
அன்னப் பறவைகள் போல
இணைந் தேயிருக்கும்
நட்பின் முகவரி !