ஏசு மாகானே...என்னை...!
பாலர் பள்ளியிலே நான் சேர்வதற்கு பாவம்
படிக்கவேண்டுமாம் முதலிலென் பெற்றோர்கள்
----முதல் சிலுவை
கல்லூரியில் சேர்வதற்கு பல லட்சங்கள்
கட்டணுமாம் கட்ஆப் மார்க் வாங்கினாலும்
----இரண்டாவது சிலுவை
அரசு வேலை கிடைக்கணுமா
சாதியோடு மதம் தாண்டி
அரசியலும் தாண்டி அப்படியும்
காத்திருப்பு பட்டியலில்
---- மூன்றாவது சிலுவை
காதலிச்சா கொல்றாங்க
ஓடுனா பிடிகிறாங்க
கட்டிவெக்க பேச்செடுத்தா
வேல வெட்டியில்லாதவனாம்
----நான்காவது சிலுவை
மனைவியா வந்தவுடன் மகராசி சொல்றா
மனை ஒண்ணுபாரு தனியா குடிபோவோம்
----ஐந்தாவது சிலுவை
வாழ்வோடு போராடி மகனை வளர்தாலோ
வாழ்வின் இறுதிகள் முதியோர் இல்லத்தில்
----ஆறாவது சிலுவை
மிஞ்சிய நாட்களை எப்படியோ முடித்து விட்டு
எஞ்சிய சிலுவையாய் நானே மாறுகிறேன்
----இது ஏழாவது சிலுவை
ஒரு சிலுவை நீ சுமந்ததாலே
ஏசுமகான் நீயானாய்
ஆறு சிலுவை சுமந்தபோதும்
ஏசும் மகன் நானாகி
ஏங்கி தவிக்கின்றேன்
ஏசுபிரானே என்னை நீ
ஏழாம் சிலுவை ஆக்கிவிடு..!