விட்பனைக்கு ஒரு மனசு!(ரோஷான் ஏ.ஜிப்ரி)
![](https://eluthu.com/images/loading.gif)
மனதின் இருப்பு
பிடித்தமானதாய் இல்லை
தேவையற்ற எதையாவது
துரத்திவந்து வாசலில் விட்டு
வேடிக்கை பார்க்கிறது
மறுபடியும் முருங்கை ஏறிய
வேதாளமாய்...!
நாக்கை தொங்கவிட்டலையும்
விசர் நாயாய்
அலைகிறது தெருத்,தெருவாய்
பச்சா தாபங்கள் பழைய பரணில்
கருவாடாய் காய
எச்சில்களுக்காய் ஏங்குகின்றது
பிச்சைக் காற பிறப்பு
யாராவது கேட்டால்
சும்மாவாவது யாரேனும்
ஒரு பைத்தியத்துக்கு
கொடுத்து தொலைக்க வேண்டும்
குரங்கு மனசை
ஒரு ஏழைக்கு உதவ இடமில்லை
சீதனமின்றி ஒரு குமருக்கு
வாழ்வளிக்க வக்கில்லை
பெற்றோரை பிரியமாய் பார்க்க
பிரியம் இல்லை
இறைவன் விரும்பத்தக்க கடமை
எதையும் செய்ய வக்கத்த
மண்ணாங்கட்டி மனசு
என்ன மண்ணாங்கட்டிக்கு!?
மனசை அது இருந்த இடத்திலிருந்து
எடுத்து விட்டு
கூழாங் கற்கள் இட்டு நிரப்பி
குழந்தைகளிடம் கொடுக்க வேண்டும்
கிலிக்கியாய் கிலிக்கித்திரிய!
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.