கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்...!!! (Mano Red )

குழலூதும் குரலில்
குரல்வளை சுருக்கி,
தெவிட்டாத தேன் பேச்சில்
அன்பாய் அவள் என்னை அழைத்தால்
கொஞ்சம் இஷ்டம்...!!!

அத்தனை பாவனைகளையும்
அருகருகே ஒன்று சேர்த்து,
மூக்கின் நுனியில் சிறு கோவம் காட்டி
அழகாய் அவள் சண்டையிட்டால்
கொஞ்சம் இஷ்டம்..!!!

விரலிடுக்கில் விரல் கோர்த்து
காற்று வெளியிட வழியின்றி,
வித விதமாய் புன்னகை செய்து
என்னுடன் அவள் நடந்து வந்தால்
கொஞ்சம் இஷ்டம்...!!!

என்னைப் பற்றிய அவள் நினைவில்
சந்தேக விஷமேறி,
நெருப்பு தெளிக்கும் வார்த்தையில்
அடங்காத கோவமாய் பேசினால்
கொஞ்சம் கஷ்டம்...!!!

உலகமாய் அவளை நினைத்து
உயிரை அவளிடம் தந்து
உள்ளங்கையில் அவளை தாங்கும் போது
கண்டுகொள்ளாதது போலிருந்தால்
கொஞ்சம் கஷ்டம்..!!

நான் ஒன்று கேட்க
அது புரியாமல் அவள் ஒன்று செய்து,
அங்ஙனம் வேதியியல் மாற்றத்தில்
பிழை ஏதும் நடந்தேறினால்
கொஞ்சம் கஷ்டம்...!!!

எழுதியவர் : மனோ ரெட் (6-Aug-13, 11:10 am)
பார்வை : 285

மேலே