நான் ரசித்தவை !!!!

அது ஒரு

அழகிய மழை காலம்

கல்லூரி முடிந்து

பேருந்தில் வீடு திரும்பும்

பயனம் அது

கண்ணுக்கு இனிக்கும்

பல காட்சிகளை கண்டேன்

முத்தமிட்டுக்கொள்ளும்

மேகங்களின் எச்சில் துளிகளாய் ...

மண்ணில் விழுந்தது

மழைத்துளி....

மழையைக் கண்டு

மனதை மூடிக் கொள்ளும்

மனிதர்களுக்கு மத்தியில்….

மழைக்காக

மனிதர்களை மூடிக்கொள்ளும் – அழகிய

மழலைகளை..... கண்டேன்

பேருந்தின் சன்னல் ஓரம்

கொஞ்சும் மழை துளியை

சுண்டி விளையாடும் உணர்வை உணர்ந்தேன்.................

சாலைகளின் குளத்தில் கொஞ்சும்

பறவைகளை கண்டேன்.......... இந்த

அழகை உணர்ந்தேன் யென்னை மறந்தேன்

வீடு வந்ததும் தெரியாமல்.......

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (6-Aug-13, 5:22 pm)
பார்வை : 102

மேலே