வாழ்க்கை

கூடுகட்ட தேவை வந்தால்
குச்சிகளைத் தேடி ஓடும்
பறவையின் தாகத்தோடும் ..........

ஆழப்புதைத்தும் நீரைக்கிழித்து
வெளிப்பட்டெழும்
பந்தின் வேகத்தோடும் ........

வெட்ட வெட்ட வளரும்
வாழையின் பொறுமையில்
புதைந்த நம்பிக்கையோடும் ......

மனசாட்சியின் வார்த்தைகளை
மறுதலிக்கா மனம் கொண்டு
நல்லொழுக்க வாழ்வின்
நாண் ஏற்றிய நரம்புகளோடும் ......

நிலையாமையை புரிந்து
பகட்டின்றி வாழும்
ஆன்ம மனத்தோடும் ........

இறுதி ஊர்வலப் பூவாகினும்
வாசம் தர மறுக்காத
அரும்பூவின் குணத்தோடும் ......

பால் முடிந்த காம்பிலும்
சுரக்கும் என்ற நம்பிக்கையில்
முயன்றுப் பார்க்கும் கன்று போலவும் .....

அறம் அறிந்தும் .......நடந்தும்
பொருள் ஈன்றும்.........கொடுத்தும்
இன்பம் துய்த்தும் ......தந்தும்
வாழ விரும்புவோரின்
விலாசங்களில் வசிக்கிறது
வாழ்க்கை எனும் பேரானந்தம் .

எழுதியவர் : திகம்பரன் (7-Aug-13, 7:22 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 205

மேலே