தோல்வி நட்பு...

நெடுநாள் வாழும் உறவென்று
நான் நினைத்தேன்
சிறுநாள் தான் வாழுமென்று
நீ புரியவைத்தாய்

மனதை பார்த்து வந்தாய்
என அகமகிழ்ந்தேன்
சந் தர்ப்பத்தால் வந்தாய்
என காட்டிவிட்டாய்

ஒன்றாக கும்மாளமிட்டு
தின்றாய் பகிர்ந்துகொண்டு
நன்றாக இல்லையென்று
சென்றாயே நயவஞ்சகமாய்

வஞ்சகத்தில் வஞ்சித்தாய்
வஞ்சியரை மிஞ்சினாய்
நெஞ்சத்தில் ஒன்றுவைத்து
வெளியொன்று பேசினாய்

உள்ளத்தை உறுத்துதே
பழகியதை நினைக்கயிலே
திருந்தி வருவாயென
காத்திருக்கின்றேன் நம்பிக்கையிலே...

எழுதியவர் : naththi (7-Aug-13, 7:45 pm)
சேர்த்தது : naththi
பார்வை : 229

மேலே