எனது பயணம்

நீர் நிலம் காற்று
இதை படைத்தவன் எவன்
அவனை தேடியே போகிறது
எனது பயணம்

விந்தை ஏந்தும் சூலகமும்
கருவை சுமக்கும் கற்பப்பையும்
அவன் கட்டளைக்கே காத்திருக்கின்றன
என்னை உலகை நோக்கி வெளியேற்ற

ஓயாது அலையடிக்கும்
அந்த கடலுக்கு தெரியுமா
பேரலையாய் மாறி
சுனாமி என்னும் பெயரில்
மனிதனை கொள்ள

தென்றலாய் இருந்து
இசைதரும் அந்த காற்றுக்கு
யார் கற்றுகொடுத்தது
புயலாய் மாறி
சொத்துக்களை சூறையாடி
குழப்பம் விளைவிக்க

பச்சையம் கொடுக்க
பரிவுடன் பெய்யும் மழை
இன்று பாசமே இன்றி
அடை மழையாய் பொழிகிறது
இதை யார் சொல்லிக்கொடுத்தது அதற்கு


இதை தேடியே பயணிக்கிறது எனது பயணம்
அறுவது வருடம் வாழ்ந்தாலும்
ஆறுவருடம் வாழ்ந்தாலும்
இறுதியில் எனது பயணம்
அவனை தேடியே போகிறது
என் பயணம் ஆறடிக்குள்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (8-Aug-13, 1:59 pm)
சேர்த்தது : nuskymim
Tanglish : enathu payanam
பார்வை : 2355

மேலே