புரியாத புதிர்கள்
பேசாத நீ
பேசுவதாக சொல்லிக்கொண்டு
ஆடாத ஆட்டம் போடும்
சாமியாடி உலகம் .........
தர்மம் தலைகாக்கும்
தர்மத்தை யார் காப்பார்
உண்மையை மறந்துவிட்டு
உலகத்தில் உள்ளோர் வாழ்கிறார் .........
கல்லாய் போனவரெல்லாம்
கல்லையே சாமியாக்கி
மனிதனாய் பிறந்தவனை
மதிக்காமல் போவதென்ன .........
அபிஷேகம் செய்யவேண்டி
பால்கொண்டு போனவருக்கு
பாலூத்தும் உலகம் இது
பகமை கொள்ளும் காலமிது .........
அன்பே கடவுளென்னும்
மந்திரத்தை மறந்துவிட்டு
அதர்மமாய் மார்க்கம் தேடி
அடித்து மால்கிறார் மதத்தாலே .........
சங்கடங்கள் நமக்குள் வேண்டாம்
நம் சந்ததிக்குள் பூசல்வேண்டாம்
மனிதனை நீ மதித்து வாழு
மற்றவற்றை நீ மிதித்து வாழு ......