ஓ ! அவளா இவள் ?

ஓ ! அவளா இவள் ?
கண்களால் வலை வீசி ,
காதோரம் கதை பேசி ,
நகங்களால் ஓவியம் தீட்டி ,
உதடோடு உதடு ஒட்டி ,
என்னோடு ஒன்றாய் தேடியவள் !.
நெற்றி யில் குங்குமமும் ,
பின்னலிட்ட கருங்கூந்தலும் ,
கையில் மடிக் கணினியும் ,
வார்த்தைகளில் ஆங்கிலமும் மாய் ,
வெற்றி ப் பாதையில் பயணிக்கும் ,
ஓ ! அவளா இவள் ?

எழுதியவர் : sundaram krishnaswamy (8-Aug-13, 6:22 pm)
சேர்த்தது : sksundaram64
பார்வை : 74

மேலே