+அழகு சின்ன பாப்பா!+
சின்ன சின்ன பாப்பா!
சிங்கார பாப்பா!
சிரித்து சிரித்து பேசி
மிட்டாயை கேப்பா!
வண்ண வண்ண பூவை
தலையிலே வப்பா!
காத்தில் பறந்து போனால்
கையை கொட்டி சிரிப்பா!
கையை கையை ஆட்டி
பறவை போல பறப்பா!
தத்தி தத்தி புள்ளி
மானைப் போல நடப்பா!
நிலா நிலா ஓடிவான்னா
வரமாட்டேன் என்பா!
நிற்காமல் ஓடிவான்னா
உட்கார்ந்து கொள்வா!
மழை பெய்யும் போது
மழையில் மெல்ல நனைவா!
காய்ச்சல் வரும் என்றால்
அதுக்கு காலில்லை என்பா!
வானவில்லை காசுக்கு
வாங்கித் தர சொல்வா!
பணம் இல்லை என்றால்
அஞ்சு காசை கொடுப்பா!
துண்டு போட்டுக் கொண்டு
ஓட்டு வந்து கேப்பா!
தடியை ஊணிக் கொண்டு
பாட்டி போல நடப்பா!
அப்ப அப்ப அழுவா
அழுகும் போதே சிரிப்பா!
பழக நல்ல பாப்பா!
அழகு சின்ன பாப்பா!