ஞானதிருவடி போற்றி (கார்த்திக்)

புருவத்து மத்தியிலே உனது
பொன் விரல் பட்டவுடன்
மண்ணுடல் மாயையாச்சோ
நுண்ணுடல் நிலையாச்சோ குருவே!!!!

சத்தியத்தை தொலைத்து
ஜகத்தினில் எடுத்த பிறவியாவும்
தக்க சிந்தனையால் தவமியற்றும்
பக்குவத்தை கற்பித்த குருவே !!!!!

நித்திரையில் நீடித்த வாழ்வு
நினதருளால் நீங்க பெற்று
நித்திரையற்ற நித்திரையை-என்னுள்
நிகழவைக்க முயற்சித்த குருவே !!!!

புது யோக நெறிதனை காட்டி
பழிபாவ பதிவினையாவும் போக்கி
பக்தியோடு பணிவையும் புகட்டி
புத்தியை தெளியவைத்த குருவே !!!!!

சித்தமலம் நீங்க பெறவும் -அன்பால்
சித்தமலர் ஆக பெறவும் நித்தமும்
நீங்காமல் என்னோடு நீயிருந்து-சிவஞானம்
நான்பெறவே அருளுவாய் குருவே !!!!


*******************************************************************
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (10-Aug-13, 5:36 pm)
பார்வை : 125

மேலே