பெத்த கடன்
முதுமை காலங்களில்
தாயின்
நான்காம் கால்களாய்
இயற்கை அழைப்புகளில்
அழைத்து செல்லும்
மகனின் கரங்கள் .
....................................................................
ரசிக்கப்பட்ட
மழலை மொழியின்
நன்றிக்கடனாய்
சகிக்க பழகியிருந்தன
தாயின்
முதுமை பிதற்றல்களை ........
மகனின் செவிகள்
.................................................................................
ஆலயம் ஆலயமாய்
அலைந்து பெற்றவளின்
மோட்சங்களுக்காகவே
திருத்தலங்களை
திசையாக்கி கொண்ட
மகனின் கால்கள்
காட்சி தருகின்றன
மண்ணில் விளைந்து
சுவனத்தில் மலரும்
மானுட மலர்களாய்
........................................................................
என்றும் எதிரொலிக்கிறது
இதயத்தில்
தாயின் காலடி
சுவர்க்கம்.
கண்ணீர்- நரகம்
என்ற
கருணை மொழிகள்
.......................................................................
கருவறை பிரசவத்தில்
அறுபட்ட
தொப்புள்க்கொடி
காயமாக
வலிக்கத்தான் செய்கிறது
தாயின்
கல்லறை பிரவேசத்தில் ....
......................................................................................
இன்றும் ...
அடைக்க முடியாமல்
தொடர்கிறது
பெத்தக்கடன் எப்போதும்
....................................................................................................