நெஞ்சில் நீங்கா நெருப்பு

அழகு மங்கையாய்
பிறந்தோம் இந்நாட்டில்!
உரிமை கேட்டு
போராடினோம் இந்நாட்டில்!
அன்றே அரைகுவல்
விடுத்தான் பாரதி!
கற்புக்கு அரசியாம்
கண்ணகியின் இந்நாட்டில்!
பெண்களுக்கு எங்கே
பாதுகாப்பு இந்நாட்டில்!
காமவெறி கொடூர
மனிதனோ இந்நாட்டில்!
பச்சிளம் குழந்தைகளும்
பலியாகிறது இந்நாட்டில்!
பசியாளல்ல பாதகனின்
கையிலே இந்நாட்டில்!
காமகொலை தவிர்க்க
வழியுண்டோ இந்நாட்டில்!
சட்டங்கள் பல்லாயிரம்
கொண்ட இந்நாட்டில்!
பேதையர்கள் படும்பாடு
பெரும்பாடு இந்நாட்டில்!
என்றுமே
நெஞ்சில் நீங்கா
நெருப்பு.......