பெண்
முயற்சியின் தூண்டுகோல்
வெற்றியின் ஊன்றுகோல்
கற்பனையின் திறவுகோல்
அன்பின் அளவுகோல்!
அன்பின் பிறப்பிடம்
இன்பத்தின் இருப்பிடம்
புன்னகையின் புகலிடம்
வாழ்வின் வளரிடம் !
மொத்தத்தில்
அவள்
இந்தப் பிரபஞ்சத்தை
இயக்கிக் கொண்டிருக்கும்
ஈர்ப்பு விசை !