நட்பு
இன்பத்திற்கு
சாலையமைத்து
துன்பத்திற்கு
வேலியமைக்கும்
மனிதத்தின் மகத்துவம்!
இன்ப துன்பம் இணைந்த
வாழ்க்கைப்பயணத்தில்
இறுதிவரை இணை பிரியாது
கை கோர்த்துச் செல்லும்
இலட்சியப் பயணம் !
உள்ளக் கதவுகளை
உரிமையோடு திறந்து வைத்து
உரையாடுகிற
உன்னதமான
ஒரே.... இடம்!
நட்பு !