மீன் பிடிக்க….
வலையைத் தூக்கி தோளில் போட்டு
வைர நெஞ்சில் என்னைப் பூட்டி
கலைந்த முடியைக் கோதிக் கோதி மீன் பிடிக்கப் போகிறார்
சிலையாய் என்னை நிற்க வைத்து மீன் பிடிக்கப் பறக்கிறார்.
ஓரக் கண்ணால் என்னைக் கொத்தி
ஈர நெஞ்சுள் என்னைப் பொத்தி
ஆரத் தழுவும் சாடை காட்டி அசைந்து அசைத்து போகிறார்
தூரக் கடலில் மீன் பிடிக்கத் துணிந்து தினம் போகிறார்.
மனத்துள் பிரிவுத் துயரை மூட்டி
எனக்காய் முகத்தில் சிரிப்பைக் காட்டி
தினம் தினம் வலையைத் தூக்கி மீன் பிடிக்கப் போகிறார்
இனப் போரின் கொடுமை யறிந்தும் பிழைப்புத் தேடி போகிறார்.
அடக்கி யாழும் அரச படைகள்
படகில் போக கடலில் தடைகள்
கிடப் பதறிந்தும் பயத்தை மறைத்து மீன் பிடிக்கப் பறக்கிறார்
படபடக்கும் என்மனதுள் நினைவை விட்டுப் போகிறார்
வ-க-பரமநாதன்